இணையத்தள வாசகர்களின் கவனத்திற்கு….. மிக விரைவில் இவ் இனணயதளதில் அதிக அளவான ஆக்கங்கள் இனணக்கபடும் உங்கள் ஆக்கங்கள் இடம்பெற விரும்பினால் எமக்கு உடன அனுப்புகள் ஆயினும் எவராக இருப்பினும் ஆக்கபூர்வமாக தரமான வார்த்தைகளில் நாகரீகமான முறையில் வரும் ஆக்கங்கள் மட்டுமே நாம் எமது இணையத்தளத்தில் பிரசுரிப்போம். theshan_10@yahoo.com .நன்றி.--திஷாந்--.

August 20, 2007

Bluewin அல்லது Hotmail எக்கவுண்டை எவ்வாறு Outlook Express ல் ஏற்படுத்திக்கொள்வது

ஏன் நாங்கள் Outlook Express ல் எக்கவுண்ட் உருவாக்கவேண்டுமெனில் உங்களுக்கு இலவச
இ-மெயில் எக்கவுண்ட் தந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு இடத்தை Server ல் தந்திருப்பார்கள் எனவே தொடர்ந்து வரும் இ-மெயில்கள் இடத்தை நிறைத்துவிடும்.அதனால் உங்களுக்கு வரும்
இ-மெயில் வரத்தடைப்படும் . அதானல் Outlook Express ல் ஒரு எக்கவுண்ட் உருவாக்கினால் உங்களுக்கு வரும் இ-மெயில் அனைத்தும் நீங்கள் கணணியைத்திறக்கும்போது தானாகவே Download ஆகி Outlook Express ல் Posteingang ல் சேர்ந்துவிடும் Server ல் இருந்து அழிக்கப்பட்டுவிடும்

உங்கள் இ-மெயில் சேர்வர் காலியாக இருப்பதால் தங்குதடையின்றி இ-மெயில் வரும்

Outlook Express ல் Bluewin க்காக எக்கவுண்ட் உருவாக்குவோம்

Outlook Express ல் மெனுவில் Extras தெரிவுசெய்து Konten.. ஐ தெரிவுசெய்க படம்1

படம்1













படம்.2 கிடைக்கும் அதில் இ-மெயிலை தெரிவுசெய்க படம் 2 ல் இன்னமும் ஒரு எக்கவுண்டும் உருவாக்கவில்லை என்று தெரிகின்றது காரணம் இ-மெயில் பெட்டியினுள் ஒன்றுமில்லை இனி நாங்கள் இ-மெயல் எக்கவுண்டை உருவாக்குவோம்

படம் 2

படம் 2ல் உள்ளவாறு E-mail தெரிவுசெய்து பின்னர் Hinzufügen தெரிவுசெய்து படம் 3 ல் உள்ளவாறு E-mail ... தெரிவுசெய்க


படம் 3

படம் 4 கிடைக்கும் அதில் உ+ம் Kandasamy Ravi என்று கொடுத்துள்ளேன் அதேபோல உங்கள் பெயரைக் கொடுங்கள்

படம் 4

பின்னர் Weiter தெரிவுசெய்யும்பொது படம் 5 கிடைக்கும் அதில் (உ+ம் ravi@bluewin.ch ) உங்களின்
இ-மெயில் முகவரியை எழுமதவும் (Bluewin ல் எக்கவுண்ட் திறக்க விரும்பினால் அதன் முகவரியை எழுதவும்)

படம் 5

தொடர்தும் Weiter தெரிவுசெய்யும்பொது படம் 6 கிடைக்கும் அதில் படம் 6 ல் உள்ளவாறு கொடுக்கவும்

Posteingangserver (POP3) -- pop.bluewin.ch

Postausgangserver (SMPT) -- mail.bluewin.ch

(இ-மெயில் அனுப்ப பெற்றுக்கொள்ள இரண்டுவகையான Protocols உள்ளன

1.POP (Post Office Protocol) Protocol மூலம் நீங்கள் இ-மெயில் பெறுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது

2.SMPT (Simple Mail Transfer Protocol ) மூலம் நீங்கள் இ-மெயில் அனுப்பப்பயன்படுகின்றது



படம் 6


தொடர்தும் Weiter தெரிவுசெய்க படம் 7 ல்


Kontoname என்ற இடத்தில் நீங்கள் ஏற்கனவே Bluewin நிறுவனத்துக்கு கொடுத்தபெயர்
கொடுக்கவும்

Kennwort என்ற இடத்தில் நீங்கள் ஏற்கனவே Bluewin நிறுவனத்துக்கு கொடுத்த kennwort
கொடுக்கவேண்டும்

(அதாவது நீங்கள் Bluewin நிறுவனத்திடம் எக்கவுண்ட் திறக்கும்போது கொடுத்த kennwort)





படம் 7



Weiter தெரிவுசெய்யும்போது இன்னாருதிரை தோன்றி பதிவுசெய்யவா என்று கேட்கும் அப்போது
Fertig stellen கிளிக் செய்யும்போது Bluewin எக்கவுண்ட் உருவாக்கப்டும்

எனிமேல் உங்களுக்கு வரும் அனைத்து இ-மெயில்களும் தானாகவே உங்கள் எக்கவுண்டுக்கு
Outlook Express ல் Posteingang ல் வந்துவிடும்



Outlook Express ல் மெனுவில் Extras தெரிவுசெய்து Konten.. ஐ தெரிவுசெய்க உங்கள் எக்கவுண்ட் உருவாகியிருக்கும் படம்.8

இவ்வாறு உங்களுக்கு பல இ-மெயில் முகவரி இருந்தால் அதற்காகவும் எக்கவுண்டுகளை உருவாக்கலாம்

August 3, 2007

இறைவனைப் பற்றி மதங்கள் கூறுவது என்ன?

மதங்கள், காலம், காலமாகத் தோற்றும் காவியங்கள்.

இறைவனைப் பற்றி மதங்கள் கூறுவது என்ன?
எங்கு இருப்பவன் இறைவன். நீக்கமற நிறைந்திருப்பவன்.
எல்லாவிடங்களிலும் வியாபித்து இருப்பவன்.
இது மதங்கள் மூலம் நமக்கு தரும் செய்தி.

ஒன்றே ஒரு குலம்; ஒருவனே தேவன் என்று பல முறை படித்துள்ளோம்.
அவன் உருவமற்றவன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆளுக்கொரு கடவுள் என்றும்; அது வித்தியாசம் என்றும்;
அது உன் கடவுள்; அது தாழ்ந்தது, இது உயர்ந்தது.... என்ற தெரு சண்டை தினம்.
இன்னும் இந்த வீணான சர்ச்சை.....

மதங்களின் பெயரால் மனிதகுலம் பிரிந்து, சண்டையிட்டுக் கொண்டுயிருக்கிறது
வேதங்களும், பைபிலும், குர்ரானும் கூறுகிறது ஒரே மொழி.
சமயங்களில் கூறுவதை கூர்ந்து பார்த்தால் மாறான கருத்தில்லை.
சைவம் என்றாலும், அல்லா என்றாலும், பிதா என்றாலும் மூலத்தில் ஒன்றுதான்.
உணர்த்துவது ஒன்றுதான்.

விவேகம் இல்லாதவர்கள், புறவேற்றுமை முக்கியம் கொடுக்கிறவர்கள் சிந்திக்கவேண்டும்.

'' சாதியிலே, மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச் சந்தடியிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து விணே அழிதல் அழகலவே ''
என்கிறார் வள்ளலார்.

தீயினைக் கும்பிடும் பார்ப்பார் -நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்
கோயிற் சிலுவையின் முன்னே - நின்று
கும்பிடும் யேசு மதத்தார்
யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள்ளே தெய்வம் இன்று - இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்

என்ற பாரதியின் வாக்கு நமது பழக்கத்தை மாற்றவேண்டும்.

மதங்களுக்கு இரண்டு முகங்கள்.
ஒன்று : அதன் தத்துவம் சார்ந்தது. அன்பையும் மனித உறவுகளாகவும்
போற்றுகிற ஆன்மீகம் முகம்.

இன்னொன்று : இந்த ஆன்மீகத்தன்மைக் காப்பாற்ற உருவாக்கப்பட்ட
சடங்கு, பூசை, யாகம், பலி என்ற சடங்கு.
மறைந்த ஆன்மீகம் முன் நிற்க வேண்டும்.
ஆனால், சடங்குதான் ஆமீகத்தை விழுங்கி விட்டு கோணல் பல சிரிக்கின்றன

July 31, 2007

சச்சின் டெண்டுல்கர்





பிறப்பு - ஏப்ரல் 24, 1973) தலைச்சிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் ஆவார். தனது 16வது வயதில் பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல் முதன்முதலாக அனைத்துலக கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார்.
சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ரன்கள் குவித்து சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும், அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக இந்தியாவின் சார்பாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவரால் ஒரே ஒரு அரைச்சதம் மட்டுமே அடிக்க முடிந்தது. 1990ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்த ஐந்து வீரர்களில் ஒருவராவார்


ஆட்டங்கள்
test-135
odi-384


ஓட்ட சராசரி
test- 54.70
odi-44.05
ஓட்டங்கள்
test-10,668
odi-14,847


100கள்/50கள்
test-35/44
odi-41/77

அதிக ஓட்டங்கள்
test- 248*
odi-186*

July 20, 2007

பிரபல வாகனங்களும் அதன் பிறப்பிடமும்

  1. Alfa Romeo-இத்தாலி

  2. Audi-ஜெர்மனி

  3. Austin-பிரிட்டன்

  4. Benz-ஜெர்மனி

  5. BMW-ஜெர்மனி

  6. Bristol-பிரிட்டன்

  7. Chrysler-அமெரிக்கா

  8. FIAT-இத்தாலி

  9. FORD-அமெரிக்கா

  10. General Motors-அமெரிக்கா

  11. HONDA-ஜப்பான்

  12. Hyundai Motor Company (HMC)& Kia- தென் கொரியா

  13. ISUZU-ஜப்பான்

  14. Jaguar-பிரிட்டன்

  15. Kia- தென் கொரியா

  16. Lambert-அமெரிக்கா

  17. LAND ROVER-பிரிட்டன்

  18. Lexus-ஜப்பான்

  19. Mazda-ஜப்பான்

  20. Mercedes-ஜெர்மனி

  21. Mitsubishi-ஜப்பான்

  22. Opel-ஜெர்மனி

  23. Peugeot-பிரான்ஸ்

  24. Porsche-ஜெர்மனி

  25. Renault-பிரான்ஸ்

  26. Standard-பிரிட்டன்

  27. Subaru-ஜப்பான்

  28. Suzuki-ஜப்பான்

  29. Toyota -ஜப்பான்

  30. Volkswagen-ஜெர்மனி

  31. Volvo-ஸ்வீடன்

July 14, 2007

மிருகம், மனிதன், மாமனிதன்

புலன்கள் மூலமாகப் பொருட்களைப் பார்ப்பதும், அப்படி நாம் பார்க்கும் போது நமது ஜீவகாந்த சக்தி செலவு ஆவதால் இன்பமோ, துன்பமோ, அமைதியோ, பேரின்பமோ வருவதும், புலன்கள் மூலமாக வரக்கூடிய வாழ்க்கை. உலகியல் வாழ்க்கை. அதற்கு மேலாக உண்மையை உணர்ந்து, இயற்கையை உணர்ந்து, அதற்குத் தக்கவாறு அருள்வாழ்வு வாழ வழி வகுத்துக் கொண்டு வாழக்கூடிய ஒரு பேராற்றலும் மனிதனிடத்தில் இருக்கிறது. ஆனால், மற்ற ஜீவராசிகளிடமும் இந்த அறிவு இல்லையா என்று பார்த்தால் இருக்கிறது. ஆனால் அந்த அறிவைச் செயல்படுத்தக் கூடிய வாய்ப்பே அவற்றுக்கு இல்லை.

பசி எடுத்தால் சாப்பிடவேண்டும். ஆனால், சாப்பாட்டிற்கு உணவு உற்பத்தி செய்ய எந்த ஜீவனாலாவது முடியுமா? உலகத்திலே, மனிதன் ஒருவனுக்குத் தான் தனக்கு வேண்டிய உணவைத் தானே உற்பத்தி செய்து சாப்பிடக்கூடிய திறமை உள்ளது. மற்ற ஜீவன்களுக்கு இல்லை. அவை என்ன செய்கின்றன?

'மற்றொரு ஜீவன் தன் வாய்க்குள் போகக் கூடியதாக இருக்க வேண்டும். அதற்கும் மேலாகத் தன்னால் கொன்று அதைச் சாப்பிடக்கூடிய, தன் வலிவுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்' இப்படித்தான் அததற்கு உரிய உணவை எல்லா ஜீவனும் தேடிக் கொள்கின்றன. உலகத்திலுள்ள எந்த ஜீவன் ஆனாலும் சரி, ஓரறிவான மரம், செடி, கொடி தவிர இரண்டாவது அறிவாகத் தோன்றி புழுவிலிருந்து மற்ற பூச்சிகள், பறவைகள், கால்நடைகள் எல்லாமே ஒரு உயிரைக் கொன்று வாழக்கூடியவை தான். ஆனால், அதனாலெல்லாம் அது கொலை செய்கிறது என்று உயிரினங்கள் பேரில் குற்றம் சுமத்த முடியாது. ஏனெனில், அவற்றுக்கு உணவு உற்பத்தி செய்யத் தெரியாது.

ஆனால், அதையே மனிதன் செய்யும்போது குற்றமாகக் கொள்கிறோம். ஏன் என்றால், துன்பத்தைத் தவிர்த்து இன்பமாக வாழ வேண்டும் என்று நம்மால் நினைக்க முடியும். இந்த உணர்வைச் செயல்பாட்டில் கொண்டு வந்தால் அதற்குத் தகுந்தவாறு திட்டமிட்டு வாழக்கூடிய அறிவு மனிதனிடம் இருக்கிறது. இப்போது மனிதனுடைய சிறப்பை உணர்ந்து கொள்கிறோம். இந்தச் சிறப்பை உணர்ந்து யார்க்கும் எவருக்கும் துன்பம் உண்டாகாமல் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதோடு, இதெல்லாம் தெரியாமல் துன்பத்தில் உழலும் மற்ற மனிதர்களும் அறிவு மேம்பாடு பெற அருள் தொண்டாற்றுவதற்கு அந்தச் சிறந்த மனிதன் முன்வரும்போது மாமனிதனாகிறான்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

ஆம்ஸ்டெர்டாம்: ஒரு பயணக்குறிப்பு - I

பெல்ஜியத்தை ஐரோப்பாவின் இதயம் என்று சொல்வார்கள். காரணம், மற்ற ஐரோப்பிய நாடுகளான, ஜெர்மனி, ப்ரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, ப்ரிட்டன், நெதர்லாந்த், லக்சம்பர்க் மற்றும் பல நாடுகளையும் இணைக்கும் இருப்புப் பாதைகள், பெல்ஜியத்தை மையமாக கொண்டு இயங்குகின்றன. அதோடு, ப்ரஸ்ஸல்ஸ், ஐரோப்பாவின் மிக முக்கிய நகரங்களான ஆர்ம்ஸ்டெர்டாம், லக்சம்பர்க், பாரிஸ், லண்டன், ஸ்ட்ராஸ்பர்க், ஷுரிக், பெசில், கொலன்,

இப்பொழுது ஆம்ஸ்டெர்டாம் நோக்கிப் போவதற்கு முன், ஐரோப்பாவில் ரயில் போக்குவரத்து பற்றி சில முக்கியமான விசயங்களைப் பார்ப்போம். ப்ரஸ்ஸல்ஸிலிருந்து, பாரிஸ் 336 கி மீ தூரத்தில் இருக்கிறது. இதைக் கடப்பதற்கு, தாலிஸ் என்ற விரைவு ரயில் எடுத்துக்கொள்ளும் நேரம் 1 மணி 27 நிமிடங்கள் மட்டுமே. அதாவது, 237 கிமீ/மணி என்ற வேகத்தில் பயணிக்கிறது அந்த ரயில். இன்னொரு தகவல. ப்ரஸ்ஸல்ஸிலிருந்து, லண்டன் செல்வதற்கு ஆகும் நேரம் 2 மணி 20 நிமிடங்களே! உங்கள் பயணத்தை, நீங்கள் லில்லியிலிருந்து (ஃப்ரான்ஸ்) தொடங்குவீர்கள் என்றால், நீங்கள் புறப்படும் நேரத்திற்கு முன்பே ஆஸ்போடில் (இன்கிலாந்து) இருப்பீர்கள்!! அது எப்படி?

அடுத்த படியாக பட்ஜெட் விசயத்திற்கு வருவோம். இங்கே வார இறுதியில் ஊர் சுற்றி வருவது ரொம்பவும் மலிவானது. மற்ற நாட்களில் பயணப்படுவதைக் காட்டிலும் 10 - 20 சதவீதம் பயணச்சீட்டு விலை குறைவு. இது எல்லா நாடுகளுக்குச் சென்று வரவும் பொருந்தாது. (உதாரணமாக பாரிசிற்கு, வாரத்தின் வேலை நாட்களில் சென்று வருவது மிகவும் மலிவானது.) ஆனால், ஹாலந்துக்கோ, லகஸம்பர்க்கிற்கோ இது பொருந்தும். அதோடு, வார இறுதிச் சலுகைப் பயணம் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்குத் தொடங்கி, ஞாயிறு நள்ளிரவு வரை பொருந்தும். நாங்கள் வாங்கியிருந்த பயணச்சீட்டின் விலை 40 யுரோ!!! (Rs 2220)





விடியற்காலை 4 மணிக்கே எழுந்து, நூடுல்ஸ் மற்றும் புளியோதரை செய்து, பாத்திரங்களில் நிரப்பிக்கொண்டு, 7.20 மணிக்கான ரயிலைப் பிடித்து, ஆம்ஸ்டெர்டாமை நோக்கிச் சென்றோம். ஒருகாலத்தில் எனது சிறு வயதில், குடும்பத்தோடு திருச்செந்தூர், இராமேஸ்வரம் அல்லது கன்னியாகுமரி சுற்றுலா செல்ல, இப்படித் தான் புளியோதரை, துவையல் தயார் செய்துகொண்டு சென்றுவந்தது ஞாபகத்திற்கு வருகிறது. இப்பொழுது குளிர்காலம் தொடங்க ஒரு சில வாரங்களே இருக்கின்றன. அதனால், குளிரின் கடுமை அந்த காலை நேரத்தில் உணரும் அளவிற்கு இருந்தது. உங்களுக்கு ஒரு அறிவுரை! ஐரோப்பாவில், உங்கள் ஊர் சுற்றும்
படலத்தை, முடிந்த அளவிற்கு, கோடை முடிவதற்குள்ளாகவே வைத்துக்கொள்ளுங்கள்.

பயண நேரம் மூன்று மணி நேரம். இடையில், ஐந்தாறு நிலையங்களில் ரயில் நின்றது. இந்த தடத்தில் உள்ள முக்கியமான இடங்களாக ஆன்ட்வெர்பன் (பெல்ஜியம்), ரோஸெந்தால் (ஹாலந்து), தி ஹேக் (ஹாலந்து) போன்ற இடங்களைச் சொல்லலாம். ஆண்ட்வெர்பன் மற்றும் ஆம்ஸ்டெர்டாம் வைர நகைகளுக்கு பெயர் போனவை. ஒருவர் விரும்பினால், ஆண்ட்வெர்பன் வைரத் தொழிற்சாலையைப் பார்த்துவிட்டு வரலாம். தூய்மையான வைரம் வேண்டுமென்றால், இந்த இடங்களில் வாங்கிக்கொள்வது நல்லது.




சில தொழிற்சாலைகளில், வைர கற்களை எப்படி தூய்மைப் படுத்துவது என்பது பற்றிய நேரடியான செய்முறை விளக்கம் கொடுக்கிறார்கள். நீங்கள் மேலே பார்க்கும் படங்களில் இரண்டுமே வைரக்கற்கள் தான். இரண்டாவது, பாலிஸ் செய்யப்பட்டதற்குப் பின்!


இந்த இடத்தில் ஆண்ட்வெர்பனைப் பற்றி சில விசயங்களைச் சொல்வது நல்லது என்று நினைக்கிறேன். ஆண்ட்வெர்பன், பெல்ஜியத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று. இதுவே உலக வைர வரத்தக மையம் என்று அழைக்கப்படுகிறது. இன்னொரு அதிசயமான, இந்தியன் என்ற முறையில் பெருமை கொள்ளத்தக்க தகவல், இங்கே 400க்கும் மேலான, இந்திய (குஜராத்தி) குடும்பங்கள் இருக்கின்றனவாம். இங்கே நடைபெறுகிற வைர வியாபாரத்தின் தூண்கள் என்று இவர்களைச் சொன்னால் மிகையாகாது. இவர்களுக்கென்று, ஒரு கிரிக்கெட் விளையாடும் மைதானம், திரையரங்கம் மற்றும் ஜைன் கோயில் என்று எல்லாம் உண்டு. ஆச்சரியப்படவேண்டிய விசயம் தான்!!! அதை விட இன்னொரு சந்தோசப்படவேண்டிய தகவல், இங்கே நடைபெறும் வைர வணிகத்தில் இந்தியர்களின் பங்கு கடந்த 20 வருடங்களில் 25 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதோடு, இவர்களுக்கு போட்டியாளர்களான யூதர்களின் பங்கு 70 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக வீழ்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் யூதர்களின் மதம் தான் என்றால் நீங்கள் நம்புவீர்களா? சூரியன்
உதித்தபின் கடையைத் திறப்பதும், சூரியன் மறைந்த பின் கடையை மூடிவிடும் யூதர்களால், எப்பொழுது வேன்டுமென்றாலும், கடையைத் திறந்து வைத்திருக்கும் இந்தியர்களோடு போட்டி போட முடியாமல் போனது ஆச்சர்யமில்லை தான்.

அடடா! ஆண்ட்வெர்பனிலேயே அதிக நேரம் செலவழித்துவிட்டோம். மீண்டும், நமது ஆம்ஸ்டெர்டாம் நோக்கிய பயணத்தைத் தொடர்வோமா?

June 12, 2007

இணையத்தள வாசகர்களின் கவனத்திற்கு…..

மிக விரைவில் இவ் இனணயதளதில் அதிக அளவான ஆக்கங்கள் இனணக்கபடும்
உங்கள் ஆக்கங்கள் இடம்பெற விரும்பினால் எமக்கு உடன அனுப்புகள்
ஆயினும் எவராக இருப்பினும் ஆக்கபூர்வமாக தரமான வார்த்தைகளில் நாகரீகமான முறையில் வரும் ஆக்கங்கள் மட்டுமே நாம் எமது இணையத்தளத்தில் பிரசுரிப்போம்.
theshan_10@yahoo.com

பெற்றோரின் புகை பிடிக்கும் பழக்கத்தால் குழந்தைகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது


ஆரோக்கியமாக பிறக்கும் குழந்தைகளுக்குக்கூட எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஹூஸ்டன் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இது குறித்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த ஆய்வை மேற்கொண்ட நெதர்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெர்ட் ஆரெட்ஸ் என்ற மாணவர் கூறியது: புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். மூச்சுத் திணறல், நிமோனியா போன்ற நோய்கள் ஏற்படும் என்று தெரிந்த அளவுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என்பது தெரியவில்லை என்றார். ஆய்வில், 4 முதல் 12 வயதுக்குள்பட்ட 244 குழந்தைகளின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அவர்களது பிற நோய்கள் குறித்த விவரம் கருத்தில் கொள்ளப்படவில்லை. பெற்றோரின் புகை பிடிக்கும் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். புகை பிடிக்கும் பழக்கம் இல்லாத பெற்றோரின் குழந்தைகள், குழந்தை பிறந்த பின் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் ஆனால் கருவுற்ற காலத்தில் இப் பழக்கம் இல்லாதவர்களின் குழந்தைகள், கருவுற்ற காலத்தில் புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட ஆனால் குழந்தை பிறந்த பின் இப் பழக்கம் இல்லாதவர்களின் குழந்தைகள், குழந்தை பிறக்கும் முன்பும் பிறந்த பின்பும் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களின் குழந்தைகள் எனப் பிரிக்கப்பட்டிருந்தனர். புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களைப் போல் அவர்களது குழந்தைகளுக்கும் நுரையீரல் செயல்பாடு குறைந்து கொண்டே வந்தது ஆய்வில் தெரியவந்தது. மேலும், கருவுற்ற காலத்தில் புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததைவிட, குழந்தை பிறந்த பின் அப் பழக்கம் தொடர்வது மிகவும் ஆபத்தானது என்றும் தெரியவந்தது. இந்த ஆய்வைத் தொடர்ந்து, புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட பெற்றோரின் 2000 குழந்தைகளைக் கொண்டு விரிவான ஆய்வு மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளார் இம் மாணவர்.

June 11, 2007

ஓசையில்லா விமானம் வடிவமைப்பு



கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் மாசச்யூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, ஓசையில்லா விமானத்திற்கான ஒரு புரட்சிகரமான வடிவமைப்பை வெளியிட்டுள்ளார்கள்.எஸ் ஏ எக்ஸ் 40 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் எழுப்பும் ஓசையானது, விமான நிலைய எல்லைகளுக்கு வெளியே உணர முடியாததாக இருக்கும்.மற்ற மரபு ரீதியான விமானங்களை விட இந்த விமானம் குறைந்த அளவே எரிபொருளை உபயோகிக்கும்.மூன்று வருட உழைப்பின் பலனாக இந்த வடிவமைப்பு உருவாகியுள்ளது.இந்தப் புதிய வகை விமானத்தின் உருவம், வளையும் இறக்கைகள் வடிவமைப்பு எனக் கூறப்படும் திட்டத்தின்படி அமையும்.ஒழுங்கற்ற பரப்பினால் ஏற்படும் காற்றுக் கொந்தளிப்பால் தான் விமான ஓசைகள் ஏற்படுவதால், இந்த விமானத்தை வடிவமைத்தவர்கள், எந்த அளவுக்கு இயலுமோ அந்த அளவுக்கு அதன் வெளிக்கட்டமைப்பை வழவழப்பாக செய்துள்ளனர்.இது போன்ற இலகுவான வடிவமைப்புடைய விமானங்களால், விரைவாக விண்னில் எழும்ப முடியும், மேலும் தரையிரங்கும் போது ஓடுபாதையை நோக்கி மெதுவாக இறங்க முடிவதால், மரபு ரீதியான மற்ற விமானங்களை விட ஓசை குறைவாக இருக்கும்.விமானம் ஏறும் போதும் தரையிரங்கும் போதும் விமானத்தைச் சுற்றி ஏற்படும் காற்றுக் கொந்தளிப்புத் தான் விமானத்தினால் ஏற்படும் ஓசைக்கு காரணம்.இந்தப் புதிய வடிவமைப்பின் மூலம், விமானத்தின் மேற்பரப்பின் ஊடேச் செல்லும் காற்றின் கொந்தளிப்பானது விமானத்தின் பின்பகுதியிலுள்ள கொந்தளிப்பற்ற காற்றை எதிர்கொள்ளும் போது, ஒருவிதமான சமன் ஏற்பட்டு விமான ஓசை குறைகிறது

கம்ப்யூட்டர் கேம்ஸ் நல்லதும் கெட்டதும்


விடியோ கேம்ஸ் விளையாட தனியாக விடியோ கேம் விளையாடும் சாதனம் தேவையில்லை. கம்ப்யூட்டரிலேயே அருமையாக விளையாடலாம். அதற்கான புரோகிராம்களை அமைத்து இயக்கினாலே போதும். ஆனால் பலரும் இதற்கு அடிமை ஆகிறார்கள். பிறரின் வெறுப்புக்கு ஆளாகிறார்கள். பெற்றோர்கள், பெண் நண்பர்கள், மனைவிகள் நிச்சயமாய் நாம் இந்த விளையாட்டுக்களை விளையாடுவதை விரும்புவதில்லை. ஏனென்றால் நாம் அவர்களையும் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் மறக்கிறோம் அல்லவா? ஆனால் எதிலும் நன்மைகளும் தீமைகளும் இருப்பது போல இவ்வகை விளையாட்டுக் களிலும் நன்மைகளும் தீமைகளும் உள்ளன. அவற்றை இங்கு காணலாம். முதலில் நன்மைகளைக் காணலாம்.1. மன அழுத்தக் குறைவு : நம்மில் மன அழுத்தம் ஏற்படாவதர்களே இல்லை எனலாம். ஏதேனும் ஒரு செயல் நம்மை அதிகம் சிந்திக்க வைத்து நம்மை அழுத்திக் கொண்டே தான் இருக்கும். இந்தச் சூழ்நிலையில் கம்ப்யூட்டருடனே வரும் டெட்ரிஸ் மற்றும் மைன்ஸ்வீப்பர் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவது நம் மன அழுத்தத்தினைக் குறைக்கும். விளையாட்டுக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு நம் திறமையைச் சோதிப்பதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நம் மன அழுத்தம் சிறிது சிறிதாக விலகத் தொடங்கும்.2. லாஜிக் திறன் வளர்ச்சி: அநேகமாக அனைத்து விளையாட்டுக்களும் நம் சிந்தனையை முறைப் படுத்துகின்றன. இந்நாளைய கல்வி முறை கற்றுக் கொடுக்க மறந்த திறன்களில் இதுவும் ஒன்று. தர்க்க ரீதியான சிந்தனை யை வளர்த்துக் கொள்வது நம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த கம்ப்யூட்டர் மற்றும் விடியோ விளையாட்டுக்கள் இதனை வளர்க்கின்றன.3. விரைந்து முடிவெடுக்கும் திறன் : தர்க்க ரீதியான சிந்தனை என்பது தேவையான ஒன்று தான். ஆனால் இது நேரத்தை வளர்த்து சில நேரங்களில் நம்மை மிக மெதுவாகச் செயல்பட வைத்திடும். நமக்கு வேகமான சிந்தனைத் திறன் அவசியம் தேவைப்படுகிறது. இதனால் நாம் விரைவாக சில முடிவுகளை எடுக்க முடியும். பெரும்பாலான விளையாட்டுக்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டிய செயல்களைப் பட்டியல் படுத்தி நம்மை விரைவாக முடிவெடுத்து செயல்பட வைக்கின்றன. எனவே கம்ப்யூட்டர் விளையாட்டுக்களை விளையாடுவதன் மூலம் இந்த விரைவாக முடிவெடுக்கும் திறனை நாம் வளர்த்துக் கொள்ளலாம்.பாதகமான விளைவுகள் என்று எடுத்துக் கொண்டால் ஒரு சிலவற்றைப் பட்டியலிடலாம். கம்ப்யூட்டரை வேறு சில கணிக்கும் பணிகளுக்குப் பயன்படுத்தும் எண்ணம் மறைந்துவிடும். எப்போதும் விளையாட்டுக்களையே இயக்கி விளையாடச் சொல்லும். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் அலுவலகத்தினை விட்டுச் செல்கையில் தன் மேஜையில் உள்ள கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு விளையாட்டினை அரை மணி விளையாடிவிட்டுத்தான் செல்கிறார். ஏறத்தாழ அடிமை ஆகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இதனால் வழக்கமான பணிகள் பாதிக்கப்படும்.எதற்கு கம்ப்யூட்டரை வாங்கினோமோ அந்த நோக்கம் போய் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கம் வந்துவிடும். இதனால் கல்வி கற்றல், ஆய்வு மேற்கொள்ளல் மற்றும் அலுவலகப் பணிகளை இயக்குதல் ஆகியவற்றிற்கென கம்ப்யூட்டர் வாங்கியவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் பின் தங்கும் நிலை ஏற்படும். குறிப்பாக மாணவர்களுக்குக் கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுக்கும் அவர்களுடைய பெற்றோர்கள் இதனைக் கண்காணிக்க வேண்டும். தங்கள் குழந்தைகள் கம்ப்யூட்டரில் விளையாட் டுக்களை விளையாடினால் முதலில் அவர்களைத் தட்டிக் கொடுத்துவிட்டுப் பின்னர் அவர்களின் விளையாடும் நேரம் அதிகரித்தால் கொஞ்சம் கொஞ்சமாக எச்சரித்து அவர்களை அப்பழக்கத் திலிருந்து விலக்க வேண்டும்.அலுவலகத்தில் ஊழியர்களைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் இந்த எச்சரிக்கை நடவடிக்கையைச் சிறிது தீவிரமாகவே மேற்கொண்டு பணி நேரத்தில் யாரும் கம்ப்யூட்டர் விளையாட்டுக்களில் ஈடுபடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் கம்ப்யூட்டர் விளையாட்டுக்களும் கத்தியைக் கையாள்வது போன்ற ஒரு செயலாகத்தான் தெரியும். கவனமாக நமக்குத் தேவையான அளவில் கையாண்டுவிட்டு பின்னர் கத்தியைப் பாதுகாப்பாக வைத்துவிடுவது போல விளையாட்டுக்களை ஓய்விற்காகவும் புத்துணர்ச்சி பெறுவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

நாசாவின் அத்லான்டிஸ் விண்கலம் விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது



மேற்படி விண்கலமானது ஏவப்பட்டு 9 நிமிடங்களுக்குகுறைந்த நேரத்தில் தனது பயணப் பாதையை சென்றடைந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரு சூரிய சக்தி அகத்துறிஞ்சும் தகடுகள் உள்ளடங்கலாக புதிய அமைப்புகளை ஸ்தாபிக்கும் தொடர்ச்சியான பணிகளை மேற்கொள்ளும் இலக்கில் 7 விண்வெளி வீரர்கள் இந்த அத்லான்டிஸ் விண்கலத்தில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.ஏற்கனவே இந்த விண்கலத்தை ஏவ கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் திட்டமிடப்பட்டிருந்த போதும் சீரற்ற காலநிலை காரணமாக அத்திட்டம் பிற்போடப்பட்டது. நாசா இதற்கு முன் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தனது விண்கலமொன்றை விண்ணுக்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2003 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட கொலம்பிய விண்கலமொன்று வெடித்துச் சிதறிய தில் அதிலிருந்த 7 விண்வெளி வீரர்களும் பலியாகியமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஓய்வு காலமான 2010 ஆம் ஆண்டுக்குள் மேற்படி புத்தமைப்பு முறைமைகளை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடுமென நாசா அதிகாரிகள் தெரிவித்தனர்.